தனிமை போதும் என்று நினைக்க வில்லையே..!
கனிவாய் பேசும் - என்
தாய் ( தமிழ் ) மொழி இருக்க...!!!
இனிதே வளரும் காதலும் அங்கு
தமிழ் மண்ணில் பிறந்த
உறவு தன்னில்...!!
வலிமை கொண்ட உறவும் இங்கே...!
இது புரியாமல் - உளியை
கொண்டடு உடைப்பதென்ன...?
மானிடனே.....!!!
ங்ஙங....!!! ங்ஙங....!!!
என்று அழுது கொண்டே நான்....!
பூ வாக பாவித்து, என்னை பொன்னாக ஈன்றவளே,
இரு ஐந்து மாதங்கள் - எனை
வலி கொண்டு சுமந்தவளே....!
நான் பெண்ணாக பிறக்க - ஓர்
வரம் ஒன்று வேண்டுமே...!
உம்மை என் கருவரையில் சுமந்து,
நான் உன் தாயாக வேண்டுமே....!
என் தாய் எனும் உறவில் நான்....!!!
உறவின் உன்னதமாய் என் தந்தை மார்பின் மீது
விண்ணையும், மண்ணையும் பார்த்தபடியே
வீரமாய் பல கதைகளும் உண்டு...!!!
நீயா, நானா என்று - விளையாட்டில்
பல போட்டிகளும் உண்டு - என்
தமக்கை, தனையனுடன்...!!!
விண்ணை முட்டும் சத்தத்தில்,
ஊரார் போற்றும் பட்சத்தில்
பல நண்பர்கள் கூட்டத்தில்
நானும் உண்டு...!!!
பாசமாய் பல உறவும்,
நேசமாய் சில உறவும்
பிறிய கண்டேனே - உறவின்
உச்சம் புரியவில்லையே அங்கு...!
கண்ணில் கண்ணீர் துளியோடு
நானும் அன்று.....!!!!
அதையும் கடந்து சென்று இருந்தேனே
பல இன்னல் மிக்க உறவும் உண்டு..!
இடியுடன் மழை பெய்வது போல
வலியுடன்...!
இனியும் ஏதுஉறவு என்றோ...?
அழகாய் அங்கே - என்
நட்பின் உறவு...!!!
சிறகை விரித்து பறப்பது போல,
உலகம் பிறந்தது எனக்கே..... என்று..!
இறை யறியாமல் - இருந்த
உறவும் உண்டு...!!!
கல்வி பயின்ற பருவத்தில் கூட
இல்லையே அவ்வுறவு..!
கவிதை எழுத கற்றுக் கொடுத்த
காதல் எனும் உறவு...!!!
விதியே என்று இருந்து விட்ட போதும்,
விடியலை நோக்கி எழுந்து விடாத போதும்
மதி மறந்து போன உறவும் உண்டு...!!!
நான் என்று உணர்ந்த பின்னே,
நாளை எனக்கு தான் என்று புரிந்தபின்னே..!
நானே தேடி சென்ற உறவும் உண்டு..!!!
உயிரிலே கலந்து, உள்ளத்திலே நிறைந்து
உன்னதமான உத்தமியின் உறவு..!
என் மனைவி எனும்
மாற்று தாய் உறவு...!!!!
நானே அறியாத கோபத்தில்
தீயாக மாறிய என் உள்ளத்தை
பூ வாக மாற்ற வந்த - பிள்ளை
கனியமுதவள் - என்
செல்ல கண்மணியவள் ..!
சிங்கார தொட்டில் கட்டி,
வண்ண தமிழில் பாட்டெடுத்து,
கண்ணே, மணியே,முத்தே என்று
பாசம் எனும் பாலுட்டி, சீராட்டி - என்
நெஞ்சினிலே நேசமெனும்
பாதம் பதித்தவள் - என் செல்ல
கண்மணியவள்....!!!!!
என் மகள் எனும் உறவில் நான்...!!!
உறவை தேடிய பயணத்தில்
நானும் இன்று..!!! என்றும்....!!!!
தனிமை போதும் என்று நினைக்க வில்லையே,
கனிவாய் பேசும் - என்
தாய் ( தமிழ் ) மொழி இருக்க.....!!!!!